தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத்தின் 14- ஆம் மாவட்ட மாநாடு இன்றைய தினம் (31.10.2021) திருவாரூர் செல்வீஸ் ஹோட்டலில் உள்ள டைமண்ட் ஹாலில், தோழர்.எஸ்.புஸ்பராஜ் நினைவரங்கத்தில் மாவட்டத் தலைவர் தோழர் எம்.ராஜமாணிக்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட இணைச் செயலாளர் தோழர் டி.மணிவண்ணன் அவர்கள் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட இணைச்செயலாளர் தோழர் .எஸ்.சுதாகர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில தலைவர் தோழர்.மு.அன்பரசு அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்.

_
மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட மாநாட்டில் வரப்பெற்ற 1400 ( ஏற்கனவே 1000 அனுப்பப்பட்டுள்ளது) உறுப்பினர் சந்தாவிற்கான விகிதாச்சார தொகையினை மாநில மையத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என மாநில தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் தோழர் வெ.சோமசுந்தரம் வேலை அறிக்கையினையும், மாவட்டப் பொருளாளர் தோழர் செ.பிரகாஷ் வரவு-செலவு அறிக்கையினையும் வைத்தனர்.

பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பிறகு தொகுப்புரை வழங்கப்பட்டு அறிக்கைகள் ஏகமனதாக ஏற்கப்பட்டது.

மாவட்ட துணைத்தலைவர்கள்
தோழர்.வி.சிவக்குமார், தோழர்.வி.தெட்சிணாமூர்த்தி, தோழர்.வி.சி்.குமார் ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர்..

மாவட்ட இணைச் செயலாளர்கள்
தோழர்.அ.தனபால்,
தோழர்.கே.எஸ்.செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் தீர்மானங்களை வழிமொழிந்தனர்.

மாநாட்டினை வாழ்த்தி தோழர்கள்.......
உ.சண்முகம், மாநில செயலாளர், TNGEA, கே.அகோரம், மு.மாநில துணைத் தலைவர், TNGEA, எம்.சௌந்தர்ராஜன், மு.மாநில செயலாளர், TNGEA, தோழர்.குரு.சந்திரசேகரன், மாநில செயலாளர், த.நா.அ.அனைத்து ஓய்வூதிர் சங்கம் ஆகியோர் பேசினர்.

_மாநிலத்துணைத் தலைவர் தோழர் இரா.மங்களபாண்டியன் நிறைவுரை ஆற்றினார்.

மாவட்டத் துணைத் தலைவர் தோழர் பி.விஜயன் நன்றி கூறினார்.

இந்த மாநாட்டில் 74 பிரதிநிதி தோழர்கள் கலந்து கொண்டனர்.*_

புதிய மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட தலைவர்
தோழர். வெ.சோமசுந்தரம்
( வருவாய்த்துறை)

மாவட்ட செயலாளர்
தோழர். செ.பிரகாஷ் (கருவூலத்துறை)

மாவட்ட பொருளாளர்
தோழர்.எஸ்.செங்குட்டுவன்,
(வருவாய்த்துறை)

துணைத் தலைவர்கள்

தோழர். வெ.தெட்சிணாமூர்த்தி
(வருவாய்த்துறை)

தோழர். பி.விஜயன்,(கூட்டுறவுத்துறை)

தோழர். டி.மணிவண்ணன்,
(மருத்துவத்துறை)

தோழர். கே.எஸ்.செந்தில்
(ஊரக வளர்ச்சித்துறை)

இணைச் செயலாளர்கள்

தோழர். எஸ்.சுதாகர்,
(வேளாண்மைத்துறை)

தோழர். பி.மகாலிங்கம்.
(நெடுஞ்சாலைத்துறை)

தோழர். டி.ராஜசேகரன்
(ஊரக வளர்ச்சித்துறை )

தோழர். கே.பாலசுப்ரமணியன் (சத்துணவுத்துறை)

தணிக்கையாளர்கள்

தோழர். எஸ்.மகேஷ்
(வருவாய்த்துறை)

தோழர்.என்.தம்பிதுரை, ( வேளாண்மைத்துறை)

ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

அன்புடன்,
செ.பிரகாஷ்,
மாவட்டச் செயலாளர்,
TNGEA, திருவாரூர்.. மாவட்டம்