தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மயிலாடுதுறை மாவட்ட மாநாடு இன்று (31.10.2021) காலை 11.00 மணிக்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் து.இளவரசன் தலைமையில் நடைபெற்றது.

TNGEA கொடியினை மாவட்ட அமைப்பாளரும், AISGEF கொடியினை மாநிலப் பொருளாளரும் ஏற்றிவைத்தனர்.

தோழர் த.ராஜேஷ்குமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தோழர் டி.சிங்காரவேலு வரவேற்புரையாற்றினார்.

மாநிலப் பொருளாளர் தோழர் மு.பாஸ்கரன் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார்.

தோழர் எம்.நடராஜன் மாநாட்டு அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றினார்.

தோழர் ஆர்.கலா வரவு - செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

நாகை, மாவட்டச் செயலாளர் தோழர் அ.தி.அன்பழகன், துணைத் தலைவர் தோழர் கே.ராஜூ, மேனாள் மாவட்டத் தலைவர் தோழர் டி.கணேசன், JAC பொதுச் செயலாளர் தோழர் த.ராயர், TNGPA மாவட்டத் தலைவர் தோழர் வ.பழனிவேலு, TNROA மேனாள் மாநிலச் செயலாளர் தோழர் லெ.பிரேம்சந்திரன், TNROA மாவட்டத் தலைவர் தோழர் செ.தென்னரசு, அஞ்சலக RMS ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் தோழர் சாமி.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விவாதங்களுக்கு பின்னர் தொகுப்புரை வழங்கி அறிக்கைகள் ஒப்புதல் பெறப்பட்டது.

மேனாள் மாநிலத் தலைவர் தோழர் மு.சுப்பிரமணியன் அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அமைப்புக்குழு உறுப்பினர்கள் தோழர் கே.ஜவகர், கே.முருகேசன், எம்.செல்வி, ப்பி.பக்கிரிசாமி, எஸ்.வெங்கடேசன் ஆகியோர் முன்மொழிந்த தீர்மானங்களை வட்டக்கிளை நிர்வாகிகள் தோழர் த.அருண்ஜோஷி, எஸ்.ரமேஷ், எஸ்.ஷீலா, பா.ராஜமோகன், கே.வெங்கடேஷ்வரன், ஆர்.மதியழகன் ஆகியோர் வழிமொழிந்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

மாவட்டத் தலைவராக தோழர் ஆர்.சிவபழனி, கூட்டுறவுத்துறை.

துணைத் தலைவர்களாக
1) தோழர் எம்.நடராஜன், கிராம நிர்வாக அலுவலர்
2) கே.ஜவகர், நெடுஞ்சாலைத்துறை
3) சி.நல்லமுத்து, ஊரக வளர்ச்சித்துறை
4) எம்.ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்

மாவட்டச் செயலாளராக தோழர் து.இளவரசன், வருவாய்துறை.

இணைச் செயலாளர்களாக
1) தோழர் ஆர்.முருகானந்தம், நில அளவைத்துறை
2) ஏ.சாந்தி, சத்துணவு
3) செ.பிச்சைப்பிள்ளை, வருவாய்துறை
4) எஸ்.வெங்கடேசன், நெடுஞ்சாலைத்துறை.

மாவட்டப் பொருளாளராக தோழர் ஆர்.கலா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளாகவும்,

1) தோழர் கே.வெங்கடேஷ்வரன், கூட்டுறவுத்துறை
2) எஸ்.கே.லதா, சத்துணவு ஆகியோர் மாவட்ட தணிக்கையாளர்களாகவும் மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1) கே.வெங்கடேஷ்வரன், கூட்டுறவுத்துறை
2) ஆர்.ராமநாராயணன், வருவாய்துறை
3) ஏ.சாந்தி, சத்துணவு
4) கே.முருகேசன், நெடுஞ்சாலைத்துறை
5) பா.ராஜமோகன், வருவாய்துறை
6) எஸ்.கே.லதா, சத்துணவு
7) பா.பூங்குழலி, வருவாய்துறை ஆகியோர் மாநில மாநாட்டு பிரதிநிதிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

500 உறுப்பினர்களுக்கான சந்தா தொகை ஏற்கனவே வழங்கியதை தொடர்ந்து மீண்டும் 500 உறுப்பினர்களுக்கான சந்தா விகிதாச்சார தொகை ரூ.10,000/- மாநிலப் பொருளாளரிடமும், மாநில மைய வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- பொதுச் செயலாளரிடமும் வழங்கப்பட்டது.

பொதுச் செயலாளர் தோழர் ஆ.செல்வம், நிறைவுரையாற்றினார்.

புதிய மாவட்டத் தலைவர் தோழர் ஆர்.சிவபழனி நன்றி கூறினார்.

மாநாட்டில் 31 பெண்கள் உட்பட்ட 75 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலாளர்