Dist.Conference and Womens Conference
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
கிருட்டினகிரி மாவட்ட மையம்.
நாள்: 20.10.2021
அன்பிற்கினிய தோழர்,
வணக்கம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,கிருட்டினகிரி மாவட்ட மகளிர் மாநாடு 19.10.2021 அன்று கிருட்டினகிரியில் உள்ள நமது சங்க கட்டடத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் B.சந்திரன் தலைமை தாங்கினார். மகளிர் துணைக்குழு உறுப்பினர் தோழர் S.ஹேமா நந்தினிதேவி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.மாவட்ட செயலாளர் தோழர் R.நடராஜன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் தோழர் K.ஜெகதாம்பிகா எழுத்துபூர்வமான அறிக்கையை வழங்கி முன்மொழிந்தார். 5 மகளிர் தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.மாவட்ட தலைவரின் தொகுப்புரைக்குப்பின் அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண் அரசு ஊழியர்கள் தொடர்பான 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேன்கனிக்கோட்டை வட்ட செயலாளர் தோழர் S.முருகேசன், ஒசூர் வட்ட செயலாளர் தோழர் M. திம்மராஜ், சூளகிரி வட்ட பொருளாளர் தோழர் C. தினேஷ், BSNLEU மாநில உதவி செயலாளர் தோழர் M.பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட மகளிர் துணைக்குழு சார்பாக 100 அரசு ஊழியர் மாத இதழ் சந்தா ரூ, 10,000/-,25 எம்ப்ளாயீல் ஃபோரம் மாத இதழ் சந்தா ரூ.2,000/-, 7ஆம் மாவட்ட மாநாட்டிற்கு நன்கொடையாக ரூ.20,000/- மாநில துணைத்தலைவர் தோழர்.G.பழனியம்மாள் அவர்களிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பாக ரூ 10,000/-,ஓசூர்வட்டக் கிளையின் சார்பாக ரூ.18,000/-, சூளகிரி வட்டக் கிளை சார்பாக ரூ.10,000|- மாவட்ட மாநாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
மாநாட்டில் 17 பேர் கொண்ட மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளராக தோழர். K.ஜெகதாம்பிகா அவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறுதியாக, "பெண்ணே உன்னால் முடியும் - உரிமையை கேட்டு முன்னால் நில்" என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் தோழர் G.பழனியம்மாள் அவர்கள் கருத்துரை மற்றும் நிறைவுரையாற்றினார்.மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் தோழர். K.தேவிேசோனா நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.மாவட்ட மகளிர் மாநாட்டில் 82 பெண் ஊழியர் உட்பட 96 பேர் கலந்துகொண்டனர்.
தோழமையுடன்,
R.நடராஜன்,
மாவட்ட செயலாளர்,
தநாஅஊச, கிருட்டினகிரி மாவட்டமையம்